A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
டில்லி
அயோத்தியில் மசூதிக்காக ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கோரிய டில்லி சகோதரிகளின் மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
அயோத்தி பாபர் மசூதி நிலத்துக்கு உரிமை கோரி டில்லியைச் சேர்ந்த 2 சகோதரிகள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி தேவேந்திரகுமார் உபாத்யாய, நீதிபதி மணிஷ் குமார் ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அயோத்தி மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூடுதல் சட்டத்தரணி ஜெனரல் ரமேஷ் குமார் சிங் ஆஜரானார்.
அவர் தனது வாதத்தில், “மனுவில் கூறப்பட்டுள்ள நிலப் பதிவு எண்ணும் மசூதிக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தின் பதிவு எண்ணும் வெவ்வேறானவை. மசூதிக்காக ஒதுக்கப்பட்ட நிலம் தனிப்பூர் கிராமத்தில் உள்ளது. மனுதாரர் குறிப்பிடும் நிலம் ஷேர்பூர் ஜபர் கிராமத்தில் உள்ளது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார்.
இதனை மனுதாரர்கள் தரப்பில் சட்டத்தரணி சட்டத்தரணி வாதிட்ட வழக்கறிஞர் ஏற்றுக்கொண்டு, மனுவை வாபஸ் பெறுவதாக குறிப்பிட்டார். இதையடுத்து டில்லி சகோதரிகளின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மசூதிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை தங்கள் நிலம் என தவறாகக் கருதி இந்த சகோதரிகள் வழக்கு தொடர்ந்துள்ளதாக அயோத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னதாக ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது.
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026