Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Mithuna / 2024 ஜனவரி 17 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அயோத்தி ராமர் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் பல்வேறு பொருட்களை கொண்டு செல்கின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த நாகபூஷன் ரெட்டி என்பவர் அயோத்தி ராமருக்கு பிரத்தியேகமாக 1265 கிலோ கிராம் எடையுள்ள லட்டு தயாரித்துள்ளார்.
இவர் கடந்த 2000-ம் ஆண்டிலிருந்து ஸ்ரீராம் கேட்டரிங் என்ற பெயரில் கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருகிறார். ராமஜென்ம பூமியில் அவதரிக்க உள்ள ராமருக்கு பிரத்தியேகமாக லட்டு தயாரிக்க முடிவு செய்தார்.
இதற்காக 30 பேர் கொண்ட குழுவினர் 24 மணி நேரமும் தொடர்ந்து பணியாற்றி 1265 கிலோ கிராம் எடையுள்ள லட்டுவை தயார் செய்துள்ளனர்.
இந்த லட்டுவை ஐதராபாத்தில் இருந்து அயோத்திக்கு குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்து கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
லட்டுடன் நாகபூஷன் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர், ஊழியர்கள் அயோத்தி நோக்கி நடை பயணமாக செல்கின்றனர்.
இந்த லட்டு தயாரித்த சுவீட் மாஸ்டர் துஷா சன் கூறுகையில்:-
“நான் மிகவும் மகிழ்ச்சியாக உணருகிறேன். எனக்கு இவ்வளவு பெரிய வேலை கிடைப்பது இதுவே முதல்முறை. மிகவும் கடினமாக உழைத்து இந்த பெரிய லட்டுவை செய்துள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago