2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

அயோத்தியில் ராமருக்கு கோவில்; புனேயில் மோடிக்கு கோவில்

A.K.M. Ramzy   / 2021 ஓகஸ்ட் 18 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

புனே

 'அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பிரதமருக்கு மரியாதை செலுத்தவே, புனேயில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோவில் கட்ட முடிவு செய்தேன் ' எனத் தெரிவித்த  பாரதிய ஜனதா  தொண்டர், புனே நகரில் பிரதமர் நரேந்திர மோடியின் மார்பளவு சிலையுடன் கோவில் கட்டப்பட்டுள்ளதென்றார்.

மஹாராஷ்டிராவின் புனே நகரைச் சேர்ந்த பாரதிய ஜனதா  தொண்டர் மயூர் முந்தே, 37. ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள இவர், அதே பகுதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறிய கோவில் கட்டியுள்ளார்.

இதுகுறித்து பாரதிய ஜனதா  தொண்டர் மயூர் கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பிரதமருக்கு மரியாதை செலுத்தவே, புனேயில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோவில் கட்ட முடிவு செய்தேன். ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் தடை சட்டம் உட்பட பல திட்டங்களை பிரதமர் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.  இதனால் எனக்கு சொந்தமான இடத்தில், ஒரு இலட்சத்தி ஆறாயிரம்  ரூபாய் செலவில் பிரதமரின் மார்பளவு சிலையுடன் கோவில் கட்டியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X