2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

’அரசாங்கத்துக்கு விவசாயிகள் காலகெடு’

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 02 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காஸியாபாத் :  

விவசாயிகளை பாதிக்கும் சட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசாங்கத்துக்கு நவம்பர் 26ஆம் திகதி  வரை அவகாசம் இருக்கிறது. அதன் பின்னும் ரத்து செய்யவில்லை என்றால் போராட்டம் தீவிரம் அடையும்,” என, பாரதிய கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் கூறினார்.

மத்திய அரசாங்கம்  புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லை பகுதிகளில் ஒரு ஆண்டுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எதிர்வரும் 26ஆம் திகதி இந்த தொடர் போராட்டத்துக்கு ஓராண்டு நிறைவு அடைகிறது.

இந்நிலையில் பாரதிய கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் கூறியதாவது: பல்வேறு விவசாய சங்கங்கள் இணைந்து சம்யுக்த கிஷாண் மோர்ச்சா என்ற அமைப்பின் கீழ் போராட்டம் நடத்தி வருகின்றன.

விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் சட்டங்களை மத்திய   உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதற்கு நவம்பர் 26ஆம் திகதி வரை அவகாசம் அளிக்கிறோம். இல்லையென்றால் நவம்பர் 27ஆம் திகதி  முதல் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தை தீவிரப் படுத்துவர்.இவ்வாறு அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .