A.K.M. Ramzy / 2021 ஜனவரி 10 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமென வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி ரசிகர்கள் அமைதியாக போராட்டம் நடத்தி வருகின் றனர்.
அரசியலுக்கு வருகிறேன், மக்களை ஏமாற்றமாட்டேன், தமிழக மக்களுக்காக என் உயிர் போனாலும் பரவாயில்லை என கூறிய நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். ஆனால் அண்ணாத்த படப்பிடிப்பில் அவருக்கு ஏற்பட்ட ரத்த அழுத்த மாறுபாடு பிரச்சினையால் தன் முடிவை பின் வாங்கிவிட்டார்.
உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரவில்லை, என்னை மன்னித்து விடுங்கள் என அறிவித்தார். இந்த முடிவை ரஜினி ரசிகர்கள் ஒரு பிரிவினர் ஏற்றுக் கொண்டாலும் மற்றொரு பிரிவினர் ஏற்கவில்லை.
அவர் அரசியலுக்கு வர வலியுறுத்தி அறவழி போராட்டத்தில் இன்று(10) ஈடுபட போவதாக அறிவித்தனர். இதற்கு ரஜினி மக்கள் மன்றம் எதிர்ப்பு தெரிவித்தது. இருந்தாலும் தங்கள் முடிவில் பின்வாங்காத ரசிகர்கள் பலர் இன்று சென்னை வள்ளூவர் கோட்டத்தில் அமைதி வழியில் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பலரும் அரசியலுக்கு வா தலைவா, அரசியலுக்கு வாங்க ரஜினி என்ற வாசகம் அடங்கிய பதாதைகளை ஏந்தி போராட்டம் செய்தனர்.
20 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
8 hours ago
9 hours ago