2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

அரசியல்வாதி வீட்டில் வெடிகுண்டு வீச்சு!

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 17 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

மதுரை

மதுரையில்  பாட்டாளி மக்கள் கட்சி முன்னாள் மாநில நிர்வாகி வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வீசியவர்களை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு பொலிஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை மேல அனுப்பானடி ராஜமான் நகரைச் சேர்ந்தவர் மாரிசெல்வம், பாமக மாநில இளைஞரணித் துணைச் செயலராக இருந்தார். இவர் நேற்றுக்காலை செல்லூருக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படும் நிலையில், இவரது மனைவி, குழந்தை வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில் அவரது வீட்டுக்கு காலை 9.30 மணி அளவில் இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து மாரிசெல்வம் பற்றி விசாரித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்றவுடன் பயங்கர சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

அதிர்ச்சியில் மாரிசெல்வத்தின் மனைவி வெளியே வந்து பார்த்தபோது, வாசல் அருகே அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறியதும், அங்கிருந்து இருவர் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடுவதையும் பார்த்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து மாரிசெல்வத்துவுக்கு, மனைவி உடனே தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், தகவல் அறிந்து கீரைத்துரை பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், உடன் வந்த வெடிகுண்டு தடுப்புப் பிரிவினரும் சம்பவ இடத்தில் வெடித்தது நாட்டு வெடிகுண்டு என்பதைக் கண்டறிந்ததுடன், வெடித்துச் சிதறிய துகள்களைச் சேகரித்துக் கொண்டனர்.

வெடிகுண்டு வீசியது யார் என்பதைக் கண்டறியும் வகையில் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிந்த சிசிடிவி கமரா பதிவுகளைச் சேகரித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .