2025 ஜூலை 31, வியாழக்கிழமை

அரிவாள் மீது ஏறி நின்று நேர்த்திக்கடன்; வைரலாகும் புகைப்படம்

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 20 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பக்தர் ஒருவர் அரிவாள் மீது ஏறி நின்று சேர்த்திக்கடன் செலுத்திய விநோத சம்பவம்  தமிழகத்தில் , தேனி மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே ஜக்கம்ம நாயக்கன்பட்டியில் உள்ள  பெருமால் ஆலயத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆலயத்தில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்றுவருவதாகக் கூறப்படுகின்றது.

அந்தவகையில் இவ்வாண்டுக்கான திருவிழாவானது கடந்த 17 ஆம் திகதி நடைபெற்றதாகவும், அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு வந்த பக்தர் ஒருவர் இரண்டு பெரிய அரிவாள்கள் மீது ஏறி நின்று, இரத்தம் வடிய வடிய தனது வேண்டுதலை நிறைவேற்றினார் எனவும்,  இதனைக் கண்டு ஆலயத்திற்கு வந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பக்தரின் பெயர்  ‘வெங்கடாசலம் ‘எனவும், அவர் தனது வியாபாரம் செழிக்க வேண்டும் என்பதற்காக வருடா வருடம் இவ்வாறு செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .