2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

அல் குர்ஆன் மீது சத்தியம் செய்ததால் சர்ச்சை

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 10 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

போபால்:

 கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமென காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும் அல் குர்ஆன்  மீது சத்தியம் செய்ததைக் கண்டித்து, முஸ்லிம் மத தலை வர்களும்  பாரதிய ஜனதாக் கட்சியும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

 மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெறவுள்ள நகராட்சி தேர்தலையொட்டி, காங்கிரஸ்  கட்சி நடத்திய உட்கட்சிக் கூட்டத்தில், கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என புனித அல் குர்ஆன்  மீது சத்தியம் செய்துள்ளமை பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.  இந்தூர்-1 சட்டசபை உறுப்பினர் சஞ்சய் சுக்லா, கட்சியின் நகரப் பிரிவுத் தலைவர் வினய் பக்லிவால், காங்கிரஸ் மேயர் வேட்பாளர்கள் மற்றும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் மேடையில் நின்று உறுதிமொழி எடுப்பது வீடியோவில் உள்ளது.

இந்த வீடியோ முஸ்லிம்கள் அதிகம் நிறைந்த மேற்கு இந்தூரின் சந்தன் நகர் பகுதியில் எடுக்கப் பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அரசியல் நடவடிக்கைகளில், புனித அல்குர்ஆனை பயன்படுத்துவதற்கு ஆட்சேபனை தெரிவித்தமை  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .