2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

அவதூறு வழக்கு: கஸ்தூரி தலைமறைவு?

Freelancer   / 2024 நவம்பர் 10 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் தலைமறைவு ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில், நடிகை கஸ்தூரி பேசியிருந்தார்.

அவரது இந்தப் பேச்சுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானாவிலும் கடும் கண்டனங்கள் குவிந்தன. எனினும், அவர் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு பொலிஸ் நிலையங்களிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகுமாறு கஸ்தூரிக்கு பொலிஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில், கஸ்தூரி தலைமறைவானதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னையில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு கஸ்தூரி தப்பி சென்றதாகவும் அவரது அலைபேசி எண்ணும் செயலில் இல்லை எனவும் கூறப்படுகிறது. 

இதையடுத்து, கஸ்தூரியை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X