2025 மே 02, வெள்ளிக்கிழமை

அவதூறு வழக்கு: ராகுல்காந்தி ஆஜராவதில் இருந்து நிரந்தர விலக்கு

Freelancer   / 2025 பெப்ரவரி 19 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதந்திரப் போராட்ட வீரரும், இந்துத்துவ சித்தாந்தவாதியுமான வி.டி. சாவர்க்கர் குறித்து ஆட்சேபகரமான கருத்துகளை தெரிவித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி நேரில் ஆஜராவதிலிருந்து புனேவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் நிரந்தர விலக்கு அளித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை புனே சிறப்பு கோர்ட்டில் நேற்று நடைபெற்றது.

 அப்போது நீதிபதி தனது உத்தரவில், 

"குற்றம் சாட்டப்பட்டவர் மக்களவையில் எதிர்க்கட்சித்தலைவராக உள்ளதால் அவர் மக்களவை கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும். மேலும், அவர் "இசட்-பிளஸ்" பாதுகாப்பில் உள்ளார். 

“விசாரணையில் அவர் கலந்துகொண்டால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதை கருத்தில்கொண்டு, இந்த வழக்கில் ராகுல்காந்தி ஆஜராவதில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X