Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 டிசெம்பர் 01 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனாத் தொற்றுப் பரவலானது தீவிரமடைந்து வருகின்றது.
குறிப்பாக கடந்த ஒரு நாளில் மாத்திரம் 4,723 பேருக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளதாகவும், 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனாத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு வழிமுறைகளை தீவிரப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த முதலமைச்சர் கொரோனாத் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளாத அரசு ஊழியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழை கண்டிப்பாக கையில் வைத்திருக்க வேண்டும்.
மேலும் தடுப்பூசி இதுவரை செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் வாரத்திற்கு ஒருமுறை பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழை தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் கொரோனாத் தடுப்பூசியை செலுத்தாதவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு அரசின் இலவச மருத்துவ சிகிச்சை கிடைக்காது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .