2025 மே 10, சனிக்கிழமை

“ஆசிரியைகள் சுடிதார் அணியலாம்”

Mithuna   / 2023 டிசெம்பர் 20 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசு பாடசாலை ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வரலாம் என தமிழக பாடசாலை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திமுகவின் நீண்ட கால பொதுச்செயலாளரான மறைந்த அன்பழகன் நினைவாக அவரது பிறந்தநாளில் (டிசெம்பர் 19) கனவு விருது வழங்கும் நிகழ்ச்சி என்பது நடத்தப்படுகிறது.  

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே இளையாம்பாளையத்தில் அமைந்துள்ள விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் நடந்த விழாவில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: “கனவு ஆசிரியர் விருது பெறும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

அரசு பாடசாலை என்பது வறுமையின் அடையாளம் இல்லை. அது நம் பெருமையின் அடையாளம் என்ற வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பாடசாலை கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியைகள் தங்களின் விருப்பப்படி விதிகளுக்கு உட்பட்டு புடவையோடு சுடிதாரும் அணிந்து வரலாம்'' என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X