2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஆசிஷ் மிஸ்ராவுக்கு தொடர்பு!

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 11 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்கிம்பூர்:

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில், கார் மோதி விவசாயிகள் இறந்த சம்பவத்தில், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு தொடர்பு இருப்பது, தடயவியல் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

  லக்கிம்பூர் கெரியில், கடந்த மாதம் மத்திய அரசாங்கத்தின்  மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அவர்கள் அந்த வழியாக சென்ற உத்தர பிரதேச துணை முதலமைச்சர் மௌரியாவுக்கு, கறுப்பு கொடி காட்ட முயன்றனர். அப்போது விவசாயிகள் கூட்டத்துக்குள் கார் புகுந்து மோதியதில் நான்கு பேர் இறந்தனர். இதையடுத்து வன்முறை வெடித்ததில், நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் பற்றி, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த சம்பவத்தில் உத்தர பிரதேச அரசாங்கம் யார் மீதும் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்கு, உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.  இதையடுத்து, விவசாயிகள் மீது காரை மோதச் செய்ததாக, மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்ளிட்டோரை உத்தர பிரதேச அரசாங்கம்  கைது செய்தது. பா.ஜ.,வினரை தாக்கிய விவசாயிகளும் கைது செய்யப்பட்டனர்.

மேலும், சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி குண்டுகள், ஆசிஷ் மற்றும் அவரது நண்பர் அங்கித் தாசுக்கு சொந்தமான கைத்துப்பாக்கிகளில் இருந்து வெளியானவை என, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .