Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 ஜூலை 30 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தில் பொதுவாக ஆடி மாதம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது வியாபார நிறுவனங்களின் தள்ளுபடிதான்.
பெரிய நிறுவனங்கள், சிறிய நிறுவனங்கள் என வேறுபாடு இல்லாமல் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், 50 சதவீதம் முதல் 60 சதவீதம் விலைக் குறைப்பு மற்றும் ,பிற சலுகைகள் என ஆடி மாதம் களைகட்டிவிடும்.
அந்தவகையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவரும் தனது இறைச்சிக்கடையில் ஆடி மாதத்தை முன்னிட்டு புதிய சலுகை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறைச்சிக் கடை தொடங்கியது முதல் ஒவ்வொரு முறையும் விற்பனையை விரிவுபடுத்தும் நோக்கில் 1 கிலோகிராம் இறைச்சிக்கு 6 முட்டை இலவசம், 12 முட்டை இலவசம் என பல்வேறு அதிரடி சலுகைகளை வழங்கி வந்தார்.
இந்நிலையில் அதற்கு ஒரு படி மேலாக ஒரு கிலோகிராம் இறைச்சி வாங்குபவர்களுக்கு ஒரு லீற்றர் பெட்றோல் இலவசம் என அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் ஆடி மாதம் முழுவதும் இந்த சலுகை இருக்கும் என்றார்.
தற்போது உள்ள சூழ்நிலையில் இறைச்சியின் விலையும் பெட்ரோல் விலையும் உச்சத்திற்கு சென்று விட்டதால், இலவசமாக பெட்றோலை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் அவரது கடையில் இறைச்சி வாங்க பொதுமக்கள் படையெடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
15 minute ago
41 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
41 minute ago
3 hours ago
3 hours ago