2025 மே 10, சனிக்கிழமை

ஆட்சியை கைப்பற்றிய சோரம் மக்கள் இயக்கம்

Mithuna   / 2023 டிசெம்பர் 04 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

40 தொகுதிகளை கொண்ட மிசோரம் சட்டசபைக்கு கடந்த மாதம் 7ம் திகதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. அம்மாநிலத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 21 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சி ஆட்சி செய்கிறது. அம்மாநில முதல் மந்திரியாக ஜொராம்தங்கா செயல்பட்டு வருகிறார். அதேவேளை, சோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ், பாஜக உள்ளிட்டவை முக்கிய எதிர்க்கட்சிகளாக திகழ்கின்றன.

இதனிடையே, மிசோரம் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் திங்கட்கிழமை (04​) எண்ணப்பட்டன. இதில், எதிர்க்கட்சியான சோரம் மக்கள் இயக்கம் கட்சி 27 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் பெரும்பான்மையுடன் மிசோரத்தில் சோரம் மக்கள் இயக்கம் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மிசோரம் மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக சோரம் மக்கள் இயக்கம் கட்சி தலைவர் லால்டுஹொமா பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆளும் மிசோ தேசிய முன்னணி கட்சி 10 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. மேலும், பாஜக 2 தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X