2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

ஆட்டுத் திருடர்களைால் வெட்டிப் படுகொலை

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 22 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருச்சி:

ஆடு திருடர்களைால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ., பூமிநாதனின் உடல் திருச்சி சோழா நகரில் நேற்று  மாலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம், நவல்பட்டு பொலிஸ் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ அதிகாரியாக பணியாற்றிய பூமிநாதன், சம்பவத்தன்று நவல்பட்டு பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் பூமிநாதன் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு சிலர் பைக்குகளில் ஆடுகளை ஏற்றிக் கொண்டு வேகமாக சென்றுள்ளனர். ஆடு ஏற்றிச் சென்றவர்கள் வேறு வழியில் தப்பிவிட்டனர். வேறு சிலரை பூமிநாதன் சுற்றிவளைத்தார். அப்போது மற்ற பொலிஸ்காரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். பொலிஸாரிடம் சிக்கிக் கொள்ளக்கூடாது என்று நினைத்த திருடர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். இதையடுத்து சம்பவ இடத்திலேயே பூமிநாதன் உயிரிழந்தார். அவ்விடத்திற்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  

 கொலையாளிகளை பிடிக்க, எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பூமிநாதன் உடல், திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று மாலை அவரது உடல், அரசு மரியாதையுடன்  உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .