2025 மே 09, வெள்ளிக்கிழமை

‘ஆண்ட்டி’ என அழைத்த காவலாளிக்கு செருப்படி

Freelancer   / 2023 செப்டெம்பர் 27 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதற்கு கோபப்படுகிறோம் என்று தெரியாமலேயே சிலர் கோபப்படுவதால் பெரிய சிக்கல்களை சந்திக்கிறார்கள். அப்படித் தான் பெங்களூருவில் பெண் ஒருவர் காவல்துறை வழக்கை சந்திக்கும் நிலைக்குத்  தள்ளப்பட்டிருக்கிறார்.

அஷ்வினி என்ற பெண், ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுத்து விட்டு கதவுக்கு அருகில் நின்றிருந்திருக்கிறார். அப்போது அந்த ஏடிஎம் மையத்தின் காவலாளி மற்றவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்குமாறு அந்தப் பெண்ணிடம் கூறியிருக்கிறார். அப்படிச் சொல்லும் போது 'ஆண்ட்டி' என அழைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் காவலாளி தனது செருப்பால் தாக்கியுள்ளார்.

அப்போது அந்த ஏடிஎம் மையத்தில் நின்றிருந்த மற்றவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மல்லேஸ்வரம் காவல் நிலைய பொலிஸார் அந்த பெண் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X