2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

’’ஆதிபராசக்தி அம்மா’’ அன்னபூரணியை தேடி வேட்டை (வீடியோ)

Editorial   / 2021 டிசெம்பர் 28 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான், ஆதிபராசக்தியின் அவதாரமென கூறிக் கொள்ளும் அன்னபூரணி,  ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு தடை விதித்துள்ள பொலிஸார், தலைமறைவாகியிருக்கும் அன்னபூரணியை தேடி வலை விரித்துள்ளனர்.

 செங்கல்பட்டு மாவட்டம் நேரு நகர் திருப்போரூர் கூட்ரோடு சாலையில் உள்ள வாசுகி திருமண மண்டபத்தில் ஜனவரி 1 ஆம் திகதி அருள்வாக்கு சொல்லவிருப்பதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது சமூக வலைத்தளங்களிலும் வைரலானது.

இதையடுத்து திருமண மண்டப உரிமையாளரை எச்சரித்த அந்த மாவட்ட பொலிஸார் அந்த நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கக் கூடாதென தெரிவித்துள்ளனர். அதையும் மீறி அனுமதித்தால் உரிமையாளர் முதலாவது குற்றவாளியாக சேர்க்கப்படுவார் என எச்சரித்துள்ளனர். இந்நிலையில், அருள்வாக்கு அன்னபூரணி அம்மா தலைமறைவாகிவிட்டார். அவரை தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .