2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

ஆயிரம் ஸ்டாலின்களினாலும் அதிமுகவை அசைக்க முடியாது

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருச்சி:

ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறினார்.

திருச்சிக்கு வருகை புரிந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தொட்டியம் வானப் பட்டறை மைதானத்தில் பொதுமக்களிடம் உரையாற்றினார்.   திமுக தலைவர் ஸ்டாலின் பொய் கூறி வருகிறார்.

எந்த காலத்திலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த ஸ்டாலின் முயற்சி செய்கிறார். அது ஒருபோதும் நடக்காது .முதலில் அவர் அவரது கட்சியை கவனிக்கவும், யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. ஸ்டாலின் ஒன்றும் உழைத்து பழக்கப்பட்டவர் அல்ல.

ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அசைக்க கூட முடியாது. அதற்கான இடத்தை அதிமுகவில் ஒருவரும் இடம் கொடுக்க மாட்டார்கள். உழைப்பவர்களுக்கு என்றும் வீழ்ச்சி இல்லை. அவர் ஒன்றும் உழைத்து முன்னேறவில்லை. மற்றவர்கள் உழைப்பால் உயர்ந்தவர்.

திமுக தலைவருக்கு, தொண்டர்களுக்கு நல்ல எண்ணம் கிடையாது. பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும் என்றும் சொல்வார்கள். அது ஸ்டாலினுக்கு தான் பொருந்தும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .