Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 நவம்பர் 15 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பள்ளிப்பட்டு
சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஆற்காடு குப்பம் கிராமத்தில் ஓடும் கொசஸ்தலை ஆற்றங்கரைக்கு நேற்று லட்சுமாபுரம் பகுதியைச் சேர்ந்த முதியவர் மாடுகளை மேய்க்க சென்றுள்ளார். அப்போது ஆற்றில் குறைவான அளவு தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இதனால் ஆற்றின் நடுவே அவர் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து நேற்று முன்தினம் இரவு திறந்துவிடப்பட்ட வெள்ளநீர் அந்த பகுதிக்கு திடீரென்று வந்து சேர்ந்தது. இதனால் வெள்ளத்தின் நடுவே மாடுகளுடன் முதியவரும் சிக்கி கொண்டு தவித்தனர்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக திருத்தணி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் துணிச்சலுடன் ஆற்று வெள்ளத்தில் இறங்கி பெரும் போராட்டத்துக்கு நடுவே முதியவரைக் கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.
ஆனால் ஆற்றின் நடுவே மேய்ந்து கொண்டிருந்த 7 மாடுகளும் ஆற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டன. அப்போது ஆற்றில் அதிக அளவு தண்ணீர் சென்றதில், மாடுகள் மிரண்டு போனதால் அவைகளை மீட்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திரும்பி விட்டனர்.
12 minute ago
38 minute ago
41 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
38 minute ago
41 minute ago
51 minute ago