2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆழ் கடலில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றிய 7 வயது சிறுமி

Editorial   / 2021 ஜூலை 30 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் காரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன். இவர், ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர். ஆழ்கடலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல், உடற்பயிற்சி செய்தல் போன்ற விழிப்புணர்வு செய்து வந்தார்.

 கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆழ்கடலில் ஒரு ஜோடிக்கு திருமணமும் நடத்தி வைத்தார்.

அரவிந்தனின் 7 வயது மகள் தாரகை ஆராதானா. இவர், ஆழ் கடலில் நீச்சல் பயிற்சி செய்தார்.

அப்போது கடலில் பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள் இருந்ததை கண்டார். இதையடுத்து நீலாங்கரை அருகே ஆழ்கடலில் இறங்கி அங்கிருந்த பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்களை அகற்றி சுத்தம் செய்தார்.

இது தொடர்பாக தாரகை ஆராதனா கூறியதாவது:-

“கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கிடப்பதையும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதையும் கண்டு எனது தந்தையுடன் சேர்ந்து ஆழ் கடலில் இறங்கி பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினேன். கடலில் மீன்கள் குறைய நாமும் காரணம். பிளாஸ்டிக்கால் கடல் வாழ் உயிரினங்கள் அழிகிறது. பிளாஸ்டிக்கால் கடல் பசு உயிரினத்தை அழிவில் இருந்து காக்க கடலில் இறங்கி சுத்தம் செய்ய போகிறேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .