A.K.M. Ramzy / 2020 நவம்பர் 05 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்கும் பணி தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்படுகிறது.
மத்திய பிரதேச மாநிலம்,சேதுபுராபரா பகுதியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் என்பவரின் 3 வயது மகன், 200 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார்.
பொலிஸாரும் தீயணைப்பு வீரர்களும் குழந்தையை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாகசெயற்பட்டுவருகின்றனர்.
மீட்பு குழுவால் குழந்தையின் குரலை கேட்க முடிவதாகவும் கிணற்றில் 100 அடிக்கு கீழ் தண்ணீர் உள்ளதாக கூறப்படுகிறது. குழந்தை எத்தனையாவது அடியில் சிக்கியுள்ளான் என்பது குறித்து தெளிவான தகவல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விராலிமலை பகுதியில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் குழந்தை சுஜித் தவறி விழுந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
25 minute ago
1 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
4 hours ago
7 hours ago