2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

ஆழ்ந்து உறங்கிய பொலிஸார்; தப்பியோடிய ஆயுள் தண்டனைக் கைதி

Ilango Bharathy   / 2022 மார்ச் 13 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸார் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது ஆயுள் தண்டனைக் கைதியொருவர் தப்பியோடிய சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முருகவேல் என்பவரே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கொலைக்குற்ற வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த குறித்த நபர் கரூர் பொலிஸ் நிலையத்தில் பதியப்பட்டுள்ள வழக்கு ஒன்றின் விசாரணைக்காக  அரவக்குறிச்சிக்கு  அழைத்து வரப்பட்டுள்ளார்.

அங்கு அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விட்டு அரச பஸ்ஸில் மீண்டும் கடலூருக்குப் பொலிஸார்  அழைத்துச் சென்றுள்ள போது நள்ளிரவு 2 மணியளவில் தியாகதுருகம் பகுதியில்  அவர் தப்பியோடியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து மேலதிக விசாரணைகளைத் தியாகதுருகம் பொலிஸார் மேற்கொண்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .