2026 மார்ச் 07, சனிக்கிழமை

இந்த ஆண்டின் முதல் ரொக்கெட் ; விண்ணில் பாய்கிறது

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 25 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆந்திர மாநிலம்

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ஒன்றாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-51 ரொக்கெட் எதிர்வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  காலை 10.24 மணிக்கு, வானிலை நிலைமைகளுக்கு உட்பட்டு விண்ணில் ஏவப்படும். இந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் முதல் ரொக்கெட் இதுவாகும்.

இதில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பூமி கண்காணிப்பு செயற்கைகோளான அமசோனியா-1 என்ற செயற்கைகோள் முதன்மை செயற்கைகோளாகும். அதனுடன், இந்தியாவைச் சேர்ந்த இன்ஸ்பேஸ் நிறுவனத்தின் யூனிட்டிசாட் தொகுப்பைச் சார்ந்த 3 செயற்கைகோள்கள், ஒரு சதீஷ்தவான் சாட், இந்திய விண்வெளித்துறையின் கீழ் செயல்படும் நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனத்தின் 14 செயற்கைகோள்கள் உட்பட 19 செயற்கைகோள்கள் ஏவப்படுகின்றன. இவற்றில் முதன்மை செயற்கைகோள், பூமியில் இருந்து 637 கிலோ மீட்டர் தூரத்தில் புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

தற்போது விண்ணில் ஏவப்பட உள்ள பி.எஸ்.எல்.வி. ரொக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 78ஆவது ரொக்கெட்டாகும். அதேபோல் முதலாவது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 39ஆவது ரொக்கெட்டாகும். தற்போது செலுத்தப்படும் வெளிநாட்டு செயற்கைகோள்களையும் சேர்த்து இதுவரை 34 நாடுகளைச் சேர்ந்த 342 செயற்கைகோள்கள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு உள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .