2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்

Editorial   / 2023 செப்டெம்பர் 26 , பி.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை, இலங்கை கடல் கொள்ளையர்கள் இந்திய எல்லைக்குள்  அத்துமீறி நுழைந்து தாக்கியதுடன்  மீனவர்களின் வலை உள்ளிட்ட மீன் பிடி சாதனங்களை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தில் இருந்து சக்தி பாலன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் திங்கட்கிழமை (25) காலை 7 மணி அளவில் ஹரி கிருஷ்ணன், சூர்யா, கண்ணன், சிரஞ்சீவி, சக்தி பாலன் உள்ளிட்ட 5 பேரும் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். அவர்கள்  கோடியக்கரை அருகே இன்று அதிகாலை மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது இரண்டு அதிவேக படகில் இந்திய எல்லைக்குள்  இலங்கை கடற்கொள்ளையர்கள் அத்துமீறி நுழைந்தனர்.

அவர்கள் வைத்திருந்த கடுமையான ஆயுதங்களால் மீனவர்களை தாக்கி, 550 கிலோ வலை, 50, ஆயிரம் மதிப்பிலான பிடித்து வைக்கப்பட்ட மீன்கள் வாக்கி டாக்கி,ஜிபிஎஸ் கருவி, பேட்டரி உள்ளிட்ட கருவிகளை கொள்ளையடித்துச் சென்றனர்.  இதனால் அச்சமடைந்து செய்வதறியாது கரை திரும்பிய மீனவர்கள் கண்ணீர் மல்க  வேதனை தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X