2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

இந்திய வாலிபரை கரம்பற்றிய உக்ரேன் பெண்

Freelancer   / 2022 மார்ச் 03 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


 போர்முனையில் காதல் திருமணம் செய்த ஜோடி அங்கிருந்து அவசரமாக இந்தியா வந்தடைந்த நிலையில் இருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

ஐதராபாத்தை சேர்ந்த பிரதீக் என்ற வாலிபர் உக்ரேனில் பணிபுரிந்து வந்தார். அவருக்கும் உக்ரேன் நாட்டை சேர்ந்த இளம்பெண் லியுபோவ் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நேரத்தில்தான் உக்ரேன் போர் தொடங்கியது. இதை அறிந்ததும் அவர்கள் இருவரும் 24ஆம் திகதியே உக்ரேனில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்த கையோடு அவர்கள், இதுபற்றி உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பிரதீக்கின் பெற்றோர், உடனே இருவரையும் இந்தியா வந்துவிடும்படி அறிவுறுத்தினர்.
அதன்படி போர்முனையில் திருமணம் செய்து, ஐதராபாத் வந்தடைந்த ஜோடிக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .