2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

இந்தியா வருகிறது உக்ரேன் பூனை

Ilango Bharathy   / 2022 மார்ச் 07 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேனில்  போர் இடம்பெற்றுவரும் நிலையில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் பலர் விமானங்களின் மூலம் இந்திய அரசினால்  மீட்கப்பட்டு வருகின்றனர்.

 இந்நிலையில் அண்மையில் கேரளாவைச் சேர்ந்த 21 வயதான ஆகில் ராதாகிருஷ்ணன் என்கிற மருத்துவம் பயிலும் மாணவர் தான் வளர்த்துவரும்  அம்மிணி என்ற பெண் பூனையை பிரிய முடியாமல் அதையும் தன்னுடன் இந்தியாவுக்கு கொண்டுவர  அனுமதி வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால் விலங்குகள்  மீட்பு விமானங்களில் அனுமதிக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 எனினும் தனது உக்ரேன் நண்பர் ஒருவர் இப்பூனையை தனக்கு பரிசளித்ததாகவும்  இப் பூனை மீது தான் அதிக பாசம் வைத்திருப்பதாகவும், அதனால் இப்பூனையை விட்டு தன்னால் இந்தியா வரமுடியாது என  அவர் தெரிவித்ததையடுத்து  குறித்த மாணவர் மற்றும் பூனையின் நெருக்கத்தை கண்டு வியந்த அதிகாரிகள் அப் பூனையையும் விமானத்தில் கொண்டுவர  அனுமதி அளித்தனர்.

இந்நிலையில் விரைவில் அகில் அவரது பூனையுடன் இந்தியாவுக்கு திரும்ப உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .