2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இந்தியாவின் செயல்பாடுகளில் UNGA தலைவர் பெருமிதம்

Editorial   / 2021 ஜூலை 25 , பி.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

தேவையான காலங்களில் மாலைதீவுக்கு எப்பொழுதும் இந்தியாவே முதல் பதில் அளிப்பவராக இருப்பதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (யுஎன்ஜீஏ) இன் தலைவராக தெரிவு செய்யப்பட்ட அப்துல்லா சாஹிட் கூறினார்.

இந்தியாவுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் பொது சபையின் (யுஎன்ஜீஏ) தலைவரும் தற்போதைய மாலைதீவு வெளியுறவு அமைச்சருமான அப்துல்லா சாஹிட்,  இந்தியா எப்பொழுதுமே மாலைதீவுக்கு தேவையான காலங்களில் பதில் அளிப்பாளராக முன் நிற்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

  பிரத்தியேக நேர்காணல் ஒன்றின் போது, இந்தியாவையும், சீனாவையும் ஒப்பிட்டு அவற்றின் ஒத்துழைப்புபற்றி கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கையில்,  “இந்தியா எப்பொழுதுமே தேவையான காலங்களில் மாலைதீவுக்கு  முதல் பதில் அளிப்பாளராக செயல்படுகின்றது” என்றார்  

. “கொவிட்-19 நெருக்கடி காலகட்டத்திலும் இந்தியா இவ்வாறு முதல் பதில் அளிப்பாளராக செயல்பட்டது. வுஹானிலிருந்து மாலைதீவு மாணவர்களை வெளியேற்றும் நடவடிக்கையின்போது அவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவர இந்தியா எங்களுக்கு உதவியது” என்றார்.

இந்தியா எங்களுக்குத் தேவைப்பட்டபோது மருத்துவர்களையும், மருத்துவ உபகரணங்களையும் , மருந்துகளையும் தடுப்பூசிகளையும் அனுப்பி உதவியது என்றும் கூறினார்.

சீனாவைப்பற்றி கூறுகையில்,  “நாங்கள் மற்ற நாடுகளை ஒப்பிட விரும்பவில்லை. நாங்கள் இந்தியாவின் உதவியை கொண்டாடுகிறோம். மற்ற நாடுகளுடனான ஒத்துழைப்பை தொடருவோம். தற்போதைய அரசின் நிலைப்பாடு அதுதான். நாங்கள் எல்லோருக்கும் நண்பன். எவருக்கும் எதிரி அல்ல” என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .