A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 25 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை ;
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி இருப்பதுடன், வலுவான சுகாதார கட்டமைப்புகளாலும், 24 மணி நேரமும் பணியாற்றும் சுகாதார பணியாளர்களாலும் கொரோனா மீட்பில் இந்தியா தொடர்ந்து உலகளவில் முதல் இடத்தில் உள்ளது. உயிர்ப்பலிகளையும் குறைத்துள்ளது.
தடுப்பூசிகளுக்கும் இந்தியா, பிற நாடுகளை சார்ந்திராமல், சுயமாக தயாரிப்பது தனிச்சிறப்பாக அமைந்துள்ளது. அந்த வகையில் தற்போது உள்நாட்டில் 2 தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கிய தடுப்பூசியை, கோவிஷீல்டு என்ற பெயரில் இந்தியாவில் புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.
இதேபோன்று ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பூசியை தயாரித்து வினியோகிக்கிறது. இவ்விரு தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு கடந்த மாதம் 3ஆம் திகதி இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல் அளித்தது.
அதைத் தொடர்ந்து ஜனவரி 16 ஆம் திகதி உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டமாக, உள்நாட்டில் தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக 1 கோடி சுகாதார பணியாளர்களுக்கும், 2 கோடி முன்கள பணியாளர்க ளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago