2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

இந்தியாவை இந்துநாடாக அறிவிக்காவிடின் ஜல சமாதி

Freelancer   / 2021 செப்டெம்பர் 29 , பி.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒக்டோபர் 2ஆம் திகதிக்குள் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு அறிவிக்காவிட்டால் சரயு நதியில் ஜல சமாதி அடையப்போவதாகவும் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியின் தபஸ்வீ மடத்தின் சாமியாரான ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சாரியா மகாராஜ் எச்சரித்துள்ளார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் தேசியக் குடியுரிமையை இரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

3 வருடங்களுக்கு முன்னர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து சாகும்வரை உண்ணாவிரதம் நடத்திய இவர், கடந்த வருடம் மீண்டும் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்.

அயோத்தியின் ராம் ஜானகி கோவிலின் முன்பாக அமர்ந்தவாறு இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

15 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்ட இவர், சாகும் வரையயான உண்ணாவிரதப் போராட்டமாக அவர் அதனை நீடித்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவரை சந்தித்ததையடுத்து உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.
 
உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு மடங்கள் இருக்கின்றன. அங்குள்ள மடாதிபதிகளில் சிலர் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக திகழ்கின்றனர். 

கொரோனா 2ஆவது அலையில் கும்பமேளாவை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் இத்தகைய மடாதிபதிகளை மீறி அரசால் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையே நிலவிது என்பது குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .