2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இந்தியாவை நாசமாக்கிய சீனா

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 31 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இடாநகர்:

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கமாங்க் ஆற்றின் நீர், திடீரென்று கறுப்பாக மாறியது. இதனால், ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன. கட்டட கழிவுகளை சீனா அதிகளவில் ஆற்றில் கொட்டியதால் தான், நீர் கறுப்பாக மாறியதாக புகார் எழுந்துள்ளது.

வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் பிரதான நதிகளின் ஒன்றான கமாங்க் ஆற்று நீர், நேற்று காலை கறுப்பாக காட்சியளித்தது. கிழக்கு கமாங்க் மாவட்ட பகுதியில் தான் ஆற்று நீர் கறுப்பாக மாறியிருந்தது. மேலும், அப்பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்து கிடந்தன. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சிஅடைந்தனர்.

நீர்வளத்துறை அதிகாரிகள் ஆற்று நீரை சோதனையிட்டனர்.அதிகளவில் கழிவுப் பொருட்கள் கலந்துள்ளதால் நீர் மாசடைந்து, மீன்கள் இறந்துள்ளன.  இதையடுத்து, 'கமாங்க் ஆற்று மீனை யாரும் சாப்பிட வேண்டாம்' என, மக்களை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

இது குறித்து நீர்வளத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கமாங்க் ஆற்றின் கரையையொட்டி சீன எல்லை அமைந்துள்ளது. தங்கள் பகுதிகளில் கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ள சீனா, கட்டுமான கழிவுகளை கமாங்க் ஆற்றில் கொட்டியது தெரியவந்தது. கமாங்க் ஆற்று நீர் மாசடைந்ததற்கு இது தான் காரணம் என சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து முழுமையாக விசாரித்தால் உண்மை தெரியும்.இவ்வாறு அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .