2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இந்திராவின் நினைவிடத்தில் ராகுல்

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 31 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 37ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மகளும், முன்னாள் முதல் பெண் பிரதமருமான இந்திரா காந்தி கடந்த 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் திகதி அன்று தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்திரா காந்தியின் நினைவுதினத்தை முன்னிட்டு, டெல்லி சக்தி ஸ்டால் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி குடும்பத்தினர் மரியாதை செலுத்துவது வழக்கம்.

இந்நிலையில், இந்திரா காந்தியின் 37வது நினைவு தினமான இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை நினைவிடத்துக்கு வந்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .