2025 ஜூலை 31, வியாழக்கிழமை

இனி ‘ஏ.டி.எம்‘ இல் தங்கம்

Ilango Bharathy   / 2022 மார்ச் 23 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஏ.டி.எம் மூலமாக தங்கம் வாங்கும் வசதி இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதன் மூலம் ஏ.டி.எம் மையத்தில்  பணம் எடுப்பது போன்று தங்கத்தையும் கொள்வனவு செய்து கொள்ளலாம்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இவ் ஏ.டி.எம் மையமானது  முதன் முதலாக ஹைதராபாத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும்,  இதனை கோல்ட் சிக்கா லிமிடெட் என்ற  நிறுவனம் அமைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்நிறுவனம் தரப்பில் இருந்து ‘தங்கத்தைக் கொள்வனவு செய்ய பிரிபெய்ட் போஸ்ட்பெய்ட் அட்டைகள் வழங்கப்படவுள்ளதாகவும், இதனை டேட்டாவேர் எல்.எல்.பி என்ற நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இது குறித்து அந் நிறுவனம் கருத்துத் தெரிவிக்கையில் ” இந்தியாவில் தங்கத்திற்கான ஏ.டி.எம் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல் முறை எனவே இன்னும் ஒரு ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் 3,000 ஏ.டி.எம் மையங்களை நிறுவ முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்து.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .