Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 டிசெம்பர் 10 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள தலயோல பரம்பு என்ற இடத்தை சேர்ந்த ஸ்ரீபிரியா, ஸ்ரீலட்சுமி என்ற இரட்டைச் சகோதரிகள் வாழ்வில் ஆச்சரியமான நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
சிறு வயதிலிருந்தே இணை பிரியாமல் ஒன்றாகவே வளர்ந்த இவ் இருவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் திகதி ஒரே மேடையில் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில் கர்ப்பமாக இருந்த இருவரும் தாம் பிறந்த வைத்திய சாலையிலேயே குழந்தைகளை பெற்று கொள்ள விரும்பியுள்ளனர்.
கடந்த 6 ஆம் திகதி காலை ஸ்ரீபிரியாவுக்கும், இரவு ஸ்ரீலெட்சுமிக்கும் பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து இருவரும் ஒரே நாளில் வேறு வேறு நேரத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் 7 ஆம் திகதி நண்பகல் சுமார் 2.20 மணியளவில் ஸ்ரீபிரியாவுக்கு ஒரு பெண் குழந்தையையும், மாலை 6.45 மணியளவில் ஸ்ரீ லெட்சுமிக்கும் ஒரு பெண் குழந்தையையும் பிறந்துள்ளது.
மேலும் இக் குழந்தைகள் இருவரும் 0+ குருதி வகையைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .