2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இரு இளைஞர்களை காவு கொண்ட ஜல்லிக்கட்டு

Freelancer   / 2022 ஜனவரி 15 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி மற்றும் அவனியாபுரத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

பொங்கல் திருநாள் அன்று அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்தநாள் அலங்காநல்லூரிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டை காண ஏராளமானோர் திரள்வதுண்டு.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேற்று முடிந்த நிலையில் இன்று காலை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது.

இதேவேளை, திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தை மாதம் 2ஆம் நாள் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.

முதன்முதலாக கோவில் அம்மன் முனியாண்டவர் கோவில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதன் பின்னர் போட்டியில் பங்கேற்ற காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. 

112 எண் கொண்ட காளையை அதன் உரிமையாளர் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் (வயது 29) வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடுவதற்காக அழைத்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த காளை உரிமையாளரான மீனாட்சி சுந்தரத்தை மார்பில் முட்டியது. இதில் குடல் சரிந்து மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு முதலுதவி சிகிச்சையளித்தனர்.

பின்னர் 108 அம்புலன்ஸ் மூலம் திருச்சி அரச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, வழியிலேயே அதிக ரத்தம் வெளியேறியதால் உயிரிழந்தார்.

இதேவேளை, அவனியாபுரத்தில் நேற்று காலை 7.45 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் மாடுபிடி வீரர்கள் 38 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 24 பேர், பார்வையாளர்கள் 18 பேர் என மொத்தம் 80 பேர் காயம் அடைந்தனர்.

மேலும் போட்டியை வேடிக்கை பார்த்த பாலமுருகன் (வயது 18) என்பவர் மாடு முட்டி பலியானார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X