2026 மார்ச் 07, சனிக்கிழமை

இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 24 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை ;

குஜராத்தில் ஆம் ஆத்மி வென்றுள்ள இடங்கள், உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை என்பதைக் காட்டுவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத் மாநகராட்சி தேர்தலில் 27 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.

இந்நிலையில் குஜராத்தில் தேர்தலில் ஆம் ஆத்மி வென்றுள்ள இடங்கள், உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை என்பதைக் காட்டுவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி வென்றுள்ள இடங்கள் உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை என்பதைக் காட்டுகிறது. மக்கள் நலனை முன்னிருத்தி களமாடுபவர்களை மக்கள் கைவிட்டதே இல்லை. தமிழகத்திலும் இது நிகழும்” என்று பதிவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .