Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Mithuna / 2023 நவம்பர் 30 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றின்போது பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது ஏழை மக்கள் வாழ்வாதாரம் இன்றி சிரமப்பட்டார்கள்.
இதனால் இந்திய பிரதமர் 'கரிப் கல்யான் அன்ன யோஜனா' என்ற திட்டம் அறிமுகப்படுத்தினார். இதனால் ஏழை மக்களுக்கு 5 கிலோ உணவு தானியம் வழங்கப்பட்டது. அத்தோடு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கூடுதலாக ஐந்து கிலோ உணவு தானியங்கள் வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் 'கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டம்' பலமுறை நீட்டிப்பிற்குப்பின் முடிவடைந்தது. அதன்பின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த திட்டம் வருகிற டிசம்பர் 31-ந்திகதியுடன் முடிவடைகிறது. இந் நிலையில் தற்போது இந்த திட்டம் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்திகதி முதல் ஐந்தாண்டு ஆண்டுகளுக்கு பயனாளிகளுக்கு வழங்கப்படும் என பிரதமர் தலைமையில் இடம்பெற்ற மந்திரி சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago