2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை

Editorial   / 2024 ஒக்டோபர் 27 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 ஒரு காட்டில் 21 வயது பெண், அவரது வருங்கால கணவன் முன்பு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஒடிசாவின் நயாகர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதியன்று மாலை 21 வயது இளம்பெண் தனது வருங்கால கணவருடன் ஃபதேகர் ராமர் கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் பித்தகை காடு அருகே இருவரையும் வழிமறித்து, வலுக்கட்டாயமாக காட்டுக்குள் அழைத்துச் சென்று அப்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

மேலும், அவர்கள் இந்த சம்பவத்தை அலைபேசியில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் ஃபதேகர் காவல் நிலையத்தில் இது குறித்து சனிக்கிழமை (26)  புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிஸார், 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்கான செயல்முறை நடந்து வருகிறது என்றும், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X