2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

இஸ்லாமிய பெண் வரைந்த கிருஷ்ணர் ஓவியம்

Editorial   / 2021 ஒக்டோபர் 03 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்னா சலீம். இவருக்கு சிறு வயது முதலே ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் இருந்துள்ளது.

இதனால் பல ஓவியங்களை தனது வாழ்நாளில் வரைந்துள்ளார். அதிலும் கிருஷ்ணர் படங்களை வரைவதில் அதீத ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதனால் சுமார் 500க்கும் மேற்பட்ட கிருஷ்ணர் ஓவியங்களை வரைந்துள்ளார்.

ஆனால் இவர் வரைந்த கிருஷ்ணர் படம் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளம் பகுதியிலுள்ள கிருஷ்ணசுவாமி கோவில் நிர்வாகத்தினர் இவர் வரைந்து வைத்திருக்கும் கிருஷ்ணர் படத்தை வாங்கி கோயிலில் வைத்து வணங்க இவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்பேரில் தான் வரைந்த ஓவியத்தை எடுத்துக்கொண்டு கோயிலுக்கு சென்று கிருஷ்ணர் படத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார். அதன்பின்னர் அவர் வணங்கியும் உள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .