2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஈரோட்டின் அடையாளமாய் மாறிய இட்லி சந்தை

A.K.M. Ramzy   / 2021 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஈரோடு

வரிசையாக பூக்கடைகள் அமைந்த மலர் சந்தையில், மாலைகள் அணிவகுத்து மணம் வீசும். ஈரோடு திருநகர் காலனியிலோ, இட்லிப்பானைகளில் இருந்து வெளியேறும் ஆவியும், சூடான இட்லியின் வாசமும் பசியை கூட்டி, நம்மை சாப்பிட அழைக்கிறது.

 ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனியில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியுள்ளது இட்லி வியாபாரம். வீட்டில் தயாரித்து, பாத்திரத்தில் வைத்து, வீதிகளில் தலைச் சுமையாக எடுத்துச் சென்று விற்பனை செய்ததுதான் இந்த இட்லி சம்ராஜ்யத்தினை  தொடங்கினர். அருகில் நடந்த கால்நடைச் சந்தை வியாபாரத்தை மேலும் வளர்த்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, ஈரோடு மட்டுமல்லாது, மாவட்ட எல்லைகளைக் கடந்து ஈரோடு இட்லியின் பசியாற்றும் பயணம் விரிவடைந்துள்ளது.

ஈரோடு இட்லி சந்தை காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலையில் 6 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் இயங்குகிறது.   ஈரோட்டில் செயல்படும் பல உணவகங்களுக்கு இங்கிருந்து இட்லி செல்வதால், நாள் ஒன்றுக்கு இட்லி சந்தையில் 10 ஆயிரம் இட்லிகள் முதல் 20 ஆயிரம் இட்லிகள் வரை சர்வசாதாரணமாக விற்பனையாகிறது.

இட்லிக்கு சட்னி, காரச் சட்னி, குருமா என சைவம் மட்டுமே வழங்கப்படுகிறது. பல அசைவ உணவகங்களில் திருநகர் காலனி இட்லியையும், தாங்கள் சமைத்த சிக்கன், மட்டன் குழம்புகளையும் இணை சேர்ந்து சிறப்பு உணவாகவே விற்பனை செய்து வருகின்றனர். இட்லி தவிர வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பணியாரம், தோசை, ஊத்தாப்பம் உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்பட்டாலும், இட்லிக்கு மட்டுமே பிரதான இடம் நிலைத்து நிற்கிறது.

 தனபாக்கியதுக்கு  80 வயது, இவர்தான், இப்பகுதியில் முதல் இட்லி கடையைத் தொடங்கியுள்ளார். மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக இருப்பவர்களுக்கு, 25 பைசா விலையில், இட்லி விற்பனையை தனபாக்கியம் தொடங்கியுள்ளார். தற்போது மூன்றாவது தலைமுறையாக, இக்குடும்பத்தினர் இட்லி வியாபாரத்தை தொடர்ந்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .