2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

உக்ரேனை விட்டு வர மறுக்கும் இந்திய மாணவி

Ilango Bharathy   / 2022 மார்ச் 02 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உக்ரேனில் இடம்பெற்று வரும் போருக்கு  மத்தியில் இந்தியாவைச் சேர்ந்த மாணவியொருவர்  ” உயிரே போனாலும் நான் இப்போ து இந்தியாவுக்கு வரமாட்டேன்” எனத் தெரிவித்துள்ள வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

உக்ரேன் தலைநகர் கீவில், பல்கலைக்கழகமொன்றில் மருத்துவம் படித்துவரும் நேஹா என்ற ஹரியானாவைச் சேர்ந்த மாணவியே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவி  உக்ரேனில் விடுதியொன்றில் தங்கி படித்து வந்துள்ள நிலையில் அங்கு போர் ஆரம்பித்தால்  விடுதி மூடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதனையடுத்து அம்மாணவியை  உக்ரேனியர் ஒருவர் தன்னுடைய வீட்டில் தங்க அனுமதித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் ரஷ்ய படையின் தாக்குதலை எதிர்கொள்ள, மாணவிக்கு அடைக்கலம் கொடுத்த நபர் அந்நாட்டு  இராணுவத்தில் இணைந்துள்ளதாகவும் இதனால், அந்த நபரின் மனைவி மற்றும் 3 குழந்தைகள் தனிமையில் விட்டு வர முடியாத நிலையில் அவர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அக் குடும்பத்தினருக்கு துணையாக, அவர்களை அருகேயிருந்து கவனித்துக் கொள்ளப் போவதாகவும், நேஹா தெரிவித்துள்ளார்.

அத்துடன்  'நான் உயிரோடு இருப்பேனா, இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால், இப்படி ஒரு சூழலில் அவர்களை விட்டு விட்டு நிச்சயம் நான் இந்தியாவுக்கு வரமாட்டேன்' என தனது தாயாரிடம் நேஹா தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாணவி நேஹாவின் முடிவு, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில தினத்திற்கு முன், இந்திய மாணவர் ஒருவர், தன்னுடைய நாய்க்குட்டியை உடன் அழைத்து வர முடியாததால், அதனுடன் உக்ரேனில் தான் இருப்பேன் என கூறியிருந்த செய்தியும், அதிகம் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .