2024 மே 17, வெள்ளிக்கிழமை

“உடலுறவுக்கு மறுப்பதும் வன்கொடுமை”

Mayu   / 2024 ஜனவரி 14 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய பிரதேசத்தில் ஒரு தம்பதிக்கு கடந்த 2006-ல் திருமணம் நடைபெற்றது. கணவர் வெளிநாடு செல்லும் வரை மனைவி உடலுறவுக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்தன.

எனவே கணவர் கீழமை நீதிமன்றத்தில் தனக்கு விவாகரத்து வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். விசாரணை நடத்திய கீழமை நீதிமன்றம் கணவருக்கு விவாகரத்து தர மறுத்தது. இதை எதிர்த்து மத்திய பிரதேச உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், மனைவி உடலுறவுக்கு மறுப்பதும் வன்கொடுமையே என்பதால் கணவருக்கு விவாகரத்து வழங்க மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது

இதுதொடர்பாக உயர் நீதிமன்ற  நீதிபதிகள் கூறுகையில், “மகிழ்வான மற்றும் நிறைவான குடும்ப வாழ்க்கைக்கு அவசியமான பாலுறவை வேண்டுமென்றே தவிர்ப்பது குடும்ப அமைதியை குலைக்கும். கணவன் - மனைவி இருவரில் ஒருவர், வேண்டுமென்றே பாலுறவைத் தவிர்ப்பது மனரீதியிலான கொடுமைப்படுத்துவதில் சேரும் என கணவர் தரப்பில் கோரிய விவாகரத்தினை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.” ​என தெ​ரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .