Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 பெப்ரவரி 21 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பஞ்சாப் மாநில சட்டப்பேரவையின் 117 தொகுதிகளுக்கான தேர்தல் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், அமிர்தசரஸ் மாவட்டத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர் வாக்களிப்பு நிலையத்திற்கு வந்த சம்பவம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இதுகுறித்து பஞ்சாப் மாநில அரசு மக்கள் தொடர்பு அதிகாரி கௌரவ்குமார் கூறியதாவது” பஞ்சாப் அமிர்தரஸ் மணவாலாவில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையார்களான சோஹ்னா மற்றும் மோஹ்னா வாக்களித்தனர். இவர்களின் வாக்கு மிகவும் தனித்துவமானது. மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் பட்டியலின் கீழ் வாக்களித்த இவர்களது வாக்குப்பதிவை முறையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இவர்கள் இணைந்திருந்தாலும் இரண்டு தனி வாக்காளர்கள். அவர்களின் வாக்குகள் ரகசியம் காக்கப்படும் வகையில் அவர்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago