2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

உணவக கழிவறையில் கமெரா வைத்த ஊழியர்

Freelancer   / 2022 ஜனவரி 29 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை, கிண்டியிலுள்ள பிரபல உணவகம் ஒன்றின் கழிவறைக்கு செல்லும் பெண்களை இரகசியமாக வீடியோ எடுத்த வந்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் மதுரவாயல் பகுதி 152வது தொகுதி திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணி அமைப்பாளரான பாரதி என்பவர் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட சைதாப்பேட்டையில் நடந்த நேர்காணலில் பங்கேற்றுள்ளார்.
 
அதன்பின்னர், கிண்டியில் உள்ள பிரபல உணவகத்தில் சாப்பிட சென்ற அவர், கழிவறையை பயன்படுத்த சென்றபோது எக்ஸாஸ்டர் பேன் உள்ள பகுதியில் சிறிய அளவிலான அட்டை பெட்டியை இருப்பதை பார்த்து சந்தேகமடைந்துள்ளார்.

இதையடுத்து அந்த பெட்டியை சோதனை செய்த போது திறன்பேசி மறைத்து வைக்கப்பட்டு, அதில் வீடியோ பதிவு செய்யப்பட்டு வந்தமை கண்டறியப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து விசாரணை நடத்திய பொலிஸார், உணவகத்தில் வேலை பார்க்கும் விருதுநகரை சேர்ந்த கண்ணன் என்பவர் திறன்பேசியை மறைத்து வீடியோ எடுத்ததை கண்டுபிடித்துள்ளனர்.

அவரை கைது செய்த பொலிஸார், நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து, அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .