2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜன சூராஜ் கட்சித் தலைவர் கைது

Freelancer   / 2025 ஜனவரி 06 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீஹாரில் நடைபெற்ற 70வது பிபிஎஸ்சி (Bihar Public Service Commission) ஒருங்கிணைந்த முதன்மை போட்டித் தேர்வை இரத்து செய்யக் கோரி, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜன சூராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர், இன்று (6) கைதுசெய்யப்பட்டார்.

அவர் கைதுசெய்யப்படும் போது,  மாணவர்கள் சூழ்ந்து கொண்டு பிரசாந்த் கிஷோரை கைது செய்ய விடாமல் தடுத்தனர். அப்போது மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, பிரசாந்த் கிஷோரை பொலிஸார் ஒருவர் கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது.

பிபிஎஸ்சி ஒருங்கிணைந்த முதன்மை போட்டித் தேர்வு கடந்த டிசம்பர் 13ஆம் திகதி மாநிலம் முழுவதும் 912 மையங்களில் நடத்தப்பட்டது. இந்த தேர்வு நடைபெறுவதற்கு முன்பாக வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அந்த தேர்வை இரத்து செய்யக் கோர,  பாட்னாவின் காந்தி மைதானத்தில், கடந்த 2ஆம் திகதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில், பிரசாந்த் கிஷோர் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X