A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 17 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருப்பூர் :
சென்னிமலையில் நடந்த விழாவில், உதயநிதிக்கு, முருகன் சிலையை, முன்னாள் அமைச்சர் வழங்கினார்.
திருப்பூர் மாவட்ட, தி.மு.க., சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சென்னிமலையில் நேற்று முன்தினம் நடந்தது. திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.முக., பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான சாமிநாதன், உதயநிதிக்கு, வெண்கலத்தில் செய்யப்பட்ட, 1 அடி உயர முருகன் சிலையை பரிசளித்தார். இதை, தயங்கியபடியே உதயநிதி பெற்றுக் கொண்டார்.
முன்பெல்லாம், தி.மு.க., விழாக்களில் இதுபோன்ற பரிசுகள் அளிப்பதில்லை. 'தி.மு.க., ஓரு ஹிந்து விரோத கட்சி' என்ற எண்ணம், மக்கள் மனதில் பதிந்து விடாமல் இருக்க, இப்போது, தி.மு.க.,வினர் திட்டமிட்டே வேல், கதாயுதம் மற்றும் ஹிந்து கடவுள் சிலைகளை, தலைவர்களுக்கு பரிசாக வழங்கி வருகின்றனர்.
தேர்தல் நேரத்தில், தி.மு.க.,வின் கடவுள் மறுப்பு கொள்கை கரைந்து வருவது, வாக்காளர்களுக்கு மட்டுமல்ல, கட்சியினருக்கு கூட ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago