2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

உதவி கோரிய உக்ரைன்; செவிசாய்த்த மோடி

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 24 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது நாட்டின் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரைத்  தடுத்து நிறுத்த உதவுமாறு உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர்  செலன்ஸ்கி  (Volodymyr Zelenskyy)இந்தியப் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ரஷ்யா  உக்ரைன் மீது தொடுத்துள்ள போரைத் தடுத்து நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக  இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடி இவ்விடயத்தில் தலையிட்டு ரஷ்ய ஜனாதிபதி  புட்டினுடன் பேசி போரைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்குச் செவிசாய்க்கும் விதமாக உக்ரைன்- ரஷ்யா போர் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருவதாகவும், விரைவில் இருநாடுகளுடனும் போர் நிறுத்தம் குறித்து பேசவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X