2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உத்தரகாண்டில் பெய்யும் கனமழையால் 16 பேர் பலி

Freelancer   / 2021 ஒக்டோபர் 19 , பி.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாநிலங்களில் ஒன்றான உத்தரகாண்டில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் அம்மாநிலத்தின் பல  பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை காரணமாக அணைகளின் நீர்வரத்து அதிகரிப்பால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால், 65 சதவீத வீதிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கவுலான் நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் முக்கிய பகுதிகளை இணைக்கும் பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. வெள்ளம் காரணமாக முன்கூட்டியே பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

மழை மற்றும் வெள்ளத்தின் பாதிப்பு நிலவரம் குறித்து   அம்மாநில முதல் மந்திரி புஷ்கர் சிங்கிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்த பிரதமர் மோடி, மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசு செய்யும் என்றும் உறுதியளித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X