2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

உயர் நீதிமன்றப் பிணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது

A.K.M. Ramzy   / 2021 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

ராஜஸ்தானில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தந்தைக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய பிணை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தானில் கடந்த ஆண்டு நான்காம் வகுப்பு படித்த மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை மீது 'போக்சோ' பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் கைதான அவருக்கு, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது. பிணையை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. முடிவில் குற்றம் சாட்டப்பட்டவரின் பிணையை ரத்து செய்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:பாலியல் வழக்கின் விசாரணை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நீண்ட நாள் நடக்கும் என்ற அடிப்படையில், உயர் நீதிமன்றம் பிணை  வழங்கி உள்ளது.

ஆனால் விசாரணை நீதிமன்றத்தில் அரச தரப்பிலான சாட்சிகள் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும் வரையிலாவது நீதியின் நலன் கருதி குற்றம் சாட்டப்பட்டவரை சிறையில் அடைப்பது அவசியம். எனவே குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு வாரத்துக்குள் சரண் அடைய வேண்டும். அவர் மீதான வழக்கின் விசாரணை அடுத்த மாதம் துவங்கும் என, அரசு தரப்பு கூறி உள்ளது. அதை விரைந்து முடிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .