2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக ஓரின சேர்க்கையாளர்

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 16 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி:

ஓரினச் சேர்க்கையில் ஆர்வமுள்ள மூத்த வழக்கறிஞருக்கு, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளிப்பதற்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய 'கொலீஜியம்' கடந்த, 2017ஆம் ஆண்டில்  வழக்கறிஞர், சவ்ரப் கிர்பலை, உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய, பரிந்துரைத்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற கொலீஜியம் கூட்டத்தில், சவ்ரப் கிர்பல் நியமனம் குறித்து நான்கு முறை விவாதிக்கப்பட்டது. முடிவு எடுக்கப்படவில்லை. கடந்த, மார்ச், 2ஆம் திகதி நடந்த கூட்டத்தில், மத்திய அரசிடம் கூடுதல் விபரங்களை கேட்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த நவம்பர் 11அம் திகதி  மீண்டும் கொலீஜியம் கூடியது. இதில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக சவ்ரப் கிர்பல் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவ்ரப் கிர்பல் நியமிக்கப்பட்டால், உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக முதன்முறையாக ஓரின சேர்க்கையாளர் நியமிக்கப்பட உள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .